வானூர்: கிளியனூர் ஸ்ரீவடபத்தி காளியம்மன் கோவிலில் செடல் திருவிழா நடந்தது.வானூர் அடுத்த கிளியனூர் ஸ்ரீவடத்தி காளியம்மன் கோவில் விழாவை முன்னிட்டு நேற்று காலை 7 மணிக்கு, கிராம பெண்கள் கோவில் ஊரணி பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். காலை 9 மணிக்கு ஊர் பகுதியில் இருந்து பெண்கள் பால்குடம் எடுத்துகொண்டு ஊர்வலமாக சென்று காளியம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். பகல் 12 மணிக்கு அலகு குத்தி செடல் திருவிழா நடந்தது. மாலை 3 மணிக்கு அம்மனுக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. அதை தொடர்ந்து காளியம்மன் அலங்கரிக்கப்பட்ட வண்டியில் முக்கிய வீதிகள் வழியாக வீதிஉலா நடந்தது.