பதிவு செய்த நாள்
06
ஆக
2014
11:08
மாமல்லபுரம் : மாமல்லபுரம், ஸ்தலசயனப் பெருமாள் கோவிலில், இன்று பவித்ரோற்சவம்
துவங்குகிறது.தமிழகத்தில் உள்ள, 108 வைணவ திருத்தலங்களில், மாமல்லபுரம், ஸ்தலசயனப் பெருமாள் கோவில், 63வது தலமாக விளங்குகிறது. இக்கோவிலில், பவித்ரோற்சவம், இன்று மாலை துவங்கி, நாளை மறுநாள் மாலை வரை, நடைபெற உள்ளது. இன்று மாலை 5:00 மணி அளவில், அங்குரார்ப்பணம் மற்றும் ஹோமத்துடன், உற்சவம் துவங்குகிறது.அதைத் தொடர்ந்து, நாளை காலை 6:00 மணி அளவில், ஹோமம், 8:00 மணி அளவில் 108 கலச பூஜை, மாலை 4:30 மணி அளவில், சுவாமிக்கு பவித்ரம் சாற்றி, ஹோமம் நடைபெறும். நாளை மறுநாள், காலை ஹோமம், மாலை 6:00 மணி அளவில், வேத, பிரபந்த சாற்றுமறை மற்றும் பூர்ணாஹூதியுடன், உற்சவம் நிறைவடையும்.