தேவநாத சுவாமி கோவிலில் ரூ.11 லட்சம் உண்டியல் வசூல்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஆக 2014 12:08
கடலூர்: கடலூர், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் உண்டியல் திறக்கப்பட்டதில் 11 லட்சம் ரூபாய் காணிக்கை கிடைத்தது. கடலூர், திரு வந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில், பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை உண்டியல் திறந்து எண்ணப்பட்டு வரு கிறது. அதன்படி நேற்று உண்டியல் திறந்து காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ஜோதி, செயல் அலுவலர் நாகராஜன், ஆய்வாளர் கோவிந்தசாமி முன்னிலையில், பக்தர்களின் காணிக்கை உண்டியலை நேற்று காலை திறந்து எண்ணும் பணி துவ ங்கியது.இப்பணியில் யூகோ வங்கி ஊழியர்கள் 10 பேர், தன்னார்வாளர்கள் 40 பேர் ஈடுபட்டனர். உண்டியலில் 11 லட்சத்து 73 ஆயிரத்து 316 ரூபாய் காணிக்கை இருந்தது. மேலும், 475 கிராம் தங்கம் மற்றும் 112 கிராம் வெள்ளி பொருட்களும் காணிக்கையாக கிடைத்தது.