பதிவு செய்த நாள்
07
ஆக
2014
12:08
பெங்களூரு : வரமகாலட்சுமி பண்டிகையை முன்னிட்டு, பெங்களூரு மார்க்கெட்டுகளில், பூக்கள், பழங்கள், காய்கறிகளின் விற்பனை களைகட்டி உள்ளது. நாளை, வரமகாலட்சுமி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக, மக்கள், பூக்கள், பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதில் மும்முரமாக உள்ளனர். பண்டிகை காரணமாக, பழங்கள், பூக்களின் விலை, 50 சதவீதம் அளவு உயர்ந்துள்ளது. அதே சமயம், காய்கறிகளின் விலை, 30 சதவீதம் குறைந்திருப்பது, மக்களுக்கு ஆறுதலை தந்துள்ளது. பெங்களூரின், கே.ஆர்., மார்க்கெட், காந்தி பஜார், பசவனகுடி, மல்லேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு மார்க்கெட்டுகளில், சில நாட்களாக, விற்பனை களைகட்டி உள்ளது. கே.ஆர்., மார்க்கெட்டில், ஒரு கிலோ, கனகாம்பரம் பூ, 500 - 600 ரூபாயாகவும்; மல்லிகை, 400 ரூபாயாகவும்; சாமந்தி, 300 - 400 ரூபாயாகவும்; ரோஜா, 200 ரூபாயாகவும் விற்கப்படுகிறது. தாமரை பூ ஒன்று, 30 - 50 ரூபாயாக உள்ளது. ஹாப்காம்ஸ் மற்றும் மார்க்கெட்டுகளுக்கு, பழங்களின் வரத்து அதிகரித்துள்ளது; ஆனால், விலை குறையவில்லை. ஒரு கிலோ, ஆப்பிள், 150 - 200 ரூபாயாகவும்; சாத்துக்குடி, 50 ரூபாயாகவும்; ஏலக்கி வாழைப்பழம், 70 - 80 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. தேங்காய் ஒன்று, 15 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வரமகாலட்சுமி பண்டிகைக்காக, பெங்களூரு மார்க்கெட்டுகளில் மக்கள் வெள்ளம் அலை மோதுகிறது.
தொடர்புடைய கோயில்கள் :