பதிவு செய்த நாள்
09
ஆக
2014
11:08
திருப்புத்தூர் :பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில், விநாயகர் சதுர்த்தி பெருவிழாவை முன்னிட்டு, ஆக.,20ம் தேதி காலை கொடியேற்றம் நடைபெறும். இக்கோயிலில்,விநாயகர் சதுர்த்தி விழா பத்து நாட்கள் கொண்டாடப்படும். வரும் 20ம் தேதி,காலை 10 மணிக்கு மேல் கொடியற்றம் நடைபெறும்.தொடர்ந்து, தினசரி இரவில்,பல்வேறு வாகனங்களில், கற்பக விநாயக உற்சவர் திருவீதி வலம் வருவார். இரண்டாம் நாள் முதல், எட்டாம் திருநாள் வரை, காலையில் வெள்ளிக்கேடகத்தில், சுவாமி புறப்பாடும் நடைபெறும். ஆறாம் திருநாளான, ஆக.,25ல் மாலை 6 மணிக்கு,அசுரனை, கற்பகவிநாயகர் வதம் செய்யும், ‘கஜமுக சூரசம்ஹாரம்’ நடைபெறும்.ஒன்பதாம் திருநாளான, ஆக.,28ல் தேரோட்டம் நடைபெறும். அன்று, மாலை 4.30 மணி முதல், இரவு 10 மணி வரை, மூலவர் சந்தனக்காப்பில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.இந்த தரிசனம், ஆண்டில் ஒரு முறை மட்டுமே நடைபெறும். பத்தாம் திருநாளன்று, விநாயகர் சதுர்த்தியன்று, காலையில் கோயில் குளத்தில், அங்குசத்தேவருக்கு தீர்த்தவாரியும், பகலில், மோதகம் படைப்பும், இரவில், பஞ்சமூர்த்திகள் திருவீதி உலாவும் நடைபெறும்.ஏற்பாட்டினை பரம்பரை அறங்காவலர்கள் நா.நாச்சியப்பச் செட்டியார், சித.நாச்சியப்பச் செட்டியார் செய்கின்றனர்.
தொடர்புடைய கோயில்கள் :