புதுச்சேரி: கதிர்காமம் தட்சிணாமூர்த்தி நகர் புத்துமாரியம்மன் கோவில் ஆடித்திருவிழாவையொட்டி பால் அபிஷேகம் நடந்தது. விழாவை முன்னிட்டு, நேற்று முன் தினம் மாலை 4:30 மணிக்கு கலச பூஜை, விநாயகர் வழிபாடு, மகா அபிஷேகத்துடன், ஹோமம் நடத்தப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. நேற்று காலை 7:00 மணிக்கு, அம்மனுக்கு விசேஷ திரவியம் மற்றும் 108 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது. 8:30 மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன், அம்மனுக்கு மகா தீபாராதனையும், கரகம் புறப்பாடும் நடந்தது. பகல் 12:00 மணிக்கு கூழ் வார்த்தல் நிகழ்ச்சியும், இரவு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதி உலாவும் நடந்தது. இன்று 9ம் தேதி, மஞ்சள் நீராட்டு மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர் குழு மற்றும் கோவில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.