கீழக்கரை: கீழக்கரை தட்டார்தெரு உக்கிர வீரமாகாளியம்மனுக்கு வரலெட்சுமி பூஜையை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. மகாலெட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சக்தி ஸ்தோத்திரங்கள், பஜனை, சுமங்கலி பூஜை, உலக நன்மைக்கான பூஜைகள் நடந்தன. ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர்கள் மற்றும் விஸ்வக்கிய தங்கம், வெள்ளி தொழிலாளர் சங்கத்தினர் செய்திருந்தனர்.பூஜையில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.