பதிவு செய்த நாள்
11
ஆக
2014
12:08
சென்னை : ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு, சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களிலும், திருமண மண்டபங்களிலும், புதிய பூணுால் அணியும் விழா நடந்தது. சென்னை பிராட்வே கொத்தவால்சாவடியில், உள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், ௩௬வது ஆண்டு, பூணுால் விழா நேற்று காலை நடந்தது. அதில், ௩௦௦க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.இதுகுறித்து கோவில் அர்ச்சகர் கூறுகையில்,”திருமணம் ஆகாதவர் கள் ஒரு புரியும், திருமணம் முடிந்தவர்கள் மூன்று புரிகளும் கொண்ட பூணுால் அணிவர். பூணுால் அணிவோர், தினசரி, சந்தியாவந்தன மும், மூன்று வேளை காயத்ரி ஜெபமும் செய்ய வேண்டும்.அவ்வாறு செய்வதால் உடலும், உள்ளமும் துாய்மை அடையும். மனம் தெளிவடையும்,” என்றார்.அதேபோல், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, திருவான்மியூர், நங்கநல்லுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், பூணுால் அணியும் விழா நடந்தது.