ரிஷிவந்தியம்: சூளாங்குறிச்சி கெங்கையம்மன் கோவிலில் தேர்திருவிழா நேற்று நடந்தது. ரிஷிவந்தியம் ஒன்றியம் சூளாங்குறிச்சி கிராமத்தில் உள்ள கெங்கையம்மன் கோவில் திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினம் இரவு சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் மாலை பெண்கள் ஊரணி பொங்கல் வைத்து வழிபட்டனர். நேற்று மாலை 3.30 மணியளவில் கோவிலில் இருந்து தேர் புறப்பட்டது. பொதுமக்கள் தேரினை வடம் பிடித்து அனைத்து தெருக்கள் வழியாக இழுத்து சென்றனர். இரவு 10 மணியளவில் தேர் கோவிலை சென்றடைந்தது.