பரமக்குடி:ஆடி வெள்ளியை முன்னிட்டு, நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரை சென்றனர். மூர்த்தி, தீர்த்தம், தலம் என பல்வேறு சிறப்புகள் பெற்ற நாகநாதசுவாமி கோயிலுக்கு, ஆண்டு முழுவதும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த வருகின்றனர். குழந்தை வரம் வேண்டுவோர், அந்த குழந்தையை கோயிலுக்கு நேர்த்திக்கடனாக செலுத்தி பின் ஏலம் எடுத்துச் செல்வர். ஆடி வெள்ளிக் கிழமைகளில் பரமக்குடியில் இருந்து பாதயாத்திரை மேற்கொள்வர். ஆடி கடைசி வெள்ளியான நேற்று அதிகாலை 4 மணி முதல் பக்தர்கள் நடந்து சென்றனர்.