ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் நித்தீஸ்வரர் சுவாமி கோவிலில் ஜனக்கல்யாண் 27ம் ஆண்டு விழா, ஜெயேந்திரர் 80வது ஜெயந்தி விழா மற்றும் ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு ஏக தின லட்சார்ச்சனை நடந்தது. விழாவையொட்டி பஞ்சமூர்த்திகள் சிறப்பு அபிஷேகம், பஞ்சமுக அர்ச்சனை நடந்தது. தொடர்ந்து பிரஹந்நாயகி அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் மற்றும் ஏக தின லட்சார்ச்சனை நடந்தது. தொடர்ந்து அன்னதானம் வழ ங்கப்பட்டது. ஏற்பாடுகளை, ஜனக்கல்யாண் அமைப்பாளர் ரவிசுந்தர், குருக்கள் ஜெய்சங்கர் ஆகியோர் செய்திருந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.