சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த வாழைக்கொல்லை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. பூ ஜையையொட்டி காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், விசேஷ அர்ச்சனையும் நடந்தது. மாலை 5.00 மணிக்கு லட்சார்ச்சனையும், திருவிளக்கு பூஜை மற்றும் ஊஞ்சல் உற்சவமும் நடந்தது. நுõற்றுக் கணக்கான பெண்கள் பூஜையில் பங்கேற்றனர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலி த்தார். தொடர்ந்து அன்னதானம் நடந்தது. பூஜைக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.