பதிவு செய்த நாள்
18
ஆக
2014
12:08
கோவை : பீளமேடு ஜெகன்நாதர் கோவிலில், கிருஷ்ணஜெயந்தி விழா கோலாகலமாக நடந்தது. இதையொட்டி,ஜெகன்நாதர், பலதேவர், சுபத்ராதேவி ஆகியோர் புதிய பட்டாடை அணிந்து பக்தர்களுக்கு அருள் பாலிலித்தனர். கிருஷ்ணஜெயந்தி விழாவையொட்டி, நேற்று அதிகாலை சுவாமிக்கு மங்கள ஆரத்தி நிகழ்ச்சி நடந்தது. சுவாமிக்கு வெவ்வேறு வண்ணங்களில், விதவிதமான பட்டாடைகள் அணிவிக்கப்பட்டன. தங்கம், வைரம், வைடூர்யம், முத்து, பவளத்தால் ஆன ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டன. கோவிலில், ஸ்ரீமத்பாகவத சொற்பொழிவு நடந்தது.இதில், இஸ்கான் அமைப்பினர் பங்கேற்றனர். தொடர்ந்து, கிருஷ்ணலீலா பஜனையும், கிருஷ்ண அவதார லீலைகள் குறித்து சொற்பொழிவும் நடந்தது. தொடர்ந்து, நள்ளிரவு 12.00 மணி வரை பஜனை நடந்தது.கோகுலாஷ்டமி விழாவையொட்டி, கோவில் முழுக்க மலர்கள் மற்றும் அலங்கார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இஸ்கான் பக்தர்கள், தண்ணீர் அருந்தாமல், மிர்ஜல் என்ற விரதத்தை கடைபிடித்தனர்.நேற்று சுவாமிக்கு நடந்த நிவேத்தியத்தில் 108 சிறப்பு உணவுப்பொருட்கள் படைக்கப்பட்டன. சிறப்பு அன்னதானமும், தரிசனத்துக்கு வந்த பக்தர்களுக்கு இனிப்புகளும் பரிமாறப்பட்டன.