புதுச்சேரி: பொறையாத்தமன் கோவிலின் திருத்தேர் அம்மன் வீதியுலா வரும் 24ம் தேதி நடக்கிறது. உப்பளம் தமிழ்த்தாய் நகரில் அமைந்துள்ள பொறையாத்தம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 15ம் தேதி துவங்கியது. மறுநாள் மாலை கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் வீதியுலா, வரும் 24ம் தேதி காலை 9:00 மணியளவில் நடக்கிறது. 31ம் தேதி இரவு 7:00 மணியளவில், ரத்தவாய் துடைத்தல் உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் பகுதி பொதுமக்கள் செய்து வருகின்றனர்.