பதிவு செய்த நாள்
18
ஆக
2014
01:08
திருப்பூர் : திருப்பூர், ஆதிபராசக்தி கோவிலில், ஆடிப்பூர பெருவிழாவையொட்டி, பால், கஞ்சி கலய ஊர்வலம், சிறப்பு அபிஷேகம் நேற்று நடந்தது. திருப்பூர், பிரிட்ஜ்வே காலனியில் உள்ள ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் சார்பில், 28ம் ஆண்டு ஆடிப்பூர பெருவிழா நடந்தது. கடந்த 15ம் தேதி சக்தி கொடி ஏற்றுதல், குரு பூஜை; 16ம் தேதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், கலச விளக்கு பூஜை, பூவோடு எடுக்கும் நிகழ்ச்சிகள் நடந்தன. முக்கிய நிகழ்ச்சியான பால் அபிஷேகம், கஞ்சி கலய அபிஷேகம் நேற்று, ஓம் சக்தி கோவிலில் நடந்தது. திருப்பூரிலுள்ள 30 வழிபாட்டு மன்றங்களில் இருந்து, பெண்கள் கஞ்சி கலயம் மற்றும் பால் குடங்களை ஊர்வலமாக, கோவிலுக்கு எடுத்து வந்தனர். பெண்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து, அம்மன் கருவறைக்குள் நேரடியாக சென்று பால் அபிஷேகம் செய்து, வழிபட்டனர். அமைச்சர் ஆனந்தன், மேயர் விசாலாட்சி, துணை மேயர் குணசேகரன் ஆகியோர், ஊர்வலம் மற்றும் அபிஷேகத்தை துவக்கி வைத்தனர். தொடர்ந்து அன்னதானம், சிறப்பு அலங்கார பூஜை, மகா தீபாராதனை நடந்தன. ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க திருப்பூர் மாவட்ட தலைவர் சரஸ்வதி, வட்ட தலைவர் விநாயகம், வேள்வி குழு தலைவர் முருகேசன், துணை தலைவர் சிவானந்தம், செயலாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.