லட்சுமியின் கையில் தேங்காய் இருப்பதுபோன்று சித்தரிக்கப்பட்டிருப்பதை சில இடங்களில் காணலாம். இதற்கொரு தத்துவமுண்டு. தேங்காய் ஓடும், தேங்காயும், அதன் நீரும் படைப்பின் மூன்று நிலைகளைச் சுட்டுவன. தேங்காய் ஓடானது, நம் கண்ணுக்குத் தெரியும் பிரபஞ்சம் மற்றும் அதிலுள்ள ஜடப்பொருட்களைக் குறிக்கிறது. புலன்களுக்கு எட்டாத நுண்ணிய அம்சங்களை சித்தரிப்பது தேங்காய்ப்பருப்பு. அதனினும் நுண்ணிய இயற்கைத் தத்துவங்களை விளக்குவது இளநீர்.