லாலாப்பேட்டை: லாலாப்பேட்டை அருகே. கள்ளப்பள்ளியில் வலம்புரி விநாயகர், நாகராஜா, யோக ஆஞ்சநேயர் ஆலயத்தில் உள்ள பெரியக்காண்டியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. காவிரியில் இருந்து புனித நீர் எடுத்து வந்து, விக்னேஷ்வர பூஜை புண்யாகம் வாஸ்து சாந்தி, யாக பூஜை நடந்தன. மங்கள இசையுடன் கடம் புறப்பட்டு மகா அபிஷேகம், கும்பாபிஷேகம் நடந்தது. சுற்றுப்புற கிராமங்களிலிருந்து, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு ö சய்தனர். கரூர் முரளி சிவாச்சாரியார் கும்பாபிஷேகத்தை செய்தார். விழா ஏற்பாடுகளை பரம்பறை அறக்காவலர்கள் கதிர்வேல், அமுதவேல், ஆகியோர் செய்தனர்.