Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சனிப்பெயர்ச்சி விழா ஜோதிடம் மாநாடு; ... கச்சத்தீவில் கொடி ஏற்றத்துடன் விழா துவங்கியது : 3741இந்திய பக்தர்கள் பங்கேற்பு கச்சத்தீவில் கொடி ஏற்றத்துடன் விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரியநாயக்கன்பாளையத்துக்கு சுவாமி கவுதமானந்தர் வருகை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 பெரியநாயக்கன்பாளையத்துக்கு சுவாமி கவுதமானந்தர் வருகை

பதிவு செய்த நாள்

28 பிப்
2026
02:02

பெ.நா.பாளையம்; உலகளாவிய ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ண மிஷன் இயக்கத்தின் தலைவர் சுவாமி கவுதமானந்தர் ஆன்மிக சுற்றுப்பயணமாக பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்திற்கு இன்று வருகை தருகிறார்.

ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ண மிஷன் இயக்கம் உலகமெங்கும், 100க்கும் மேற்பட்ட நாடுகளில் தங்கள் கிளைகளை நிறுவி, ஆயிரக்கணக்கான துறவிகள் வாயிலாக, கல்வி, மருத்துவம், பேரிடர் நிவாரணம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை மக்களுக்கு ஆற்றி வருகிறது. இதன் உலகளாவிய தலைவராக சுவாமி கவுதமானந்தர் உள்ளார். இவர் பக்தர்களுக்கு ஆசி வழங்குவும், பல்வேறு நிகழ்ச்சிகளை கலந்து கொள்ளவும் பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்துக்கு இன்று வருகை தருகிறார்.

இன்று, 28ம் தேதி சனிக்கிழமை மதியம், 2:00 மணி அளவில் பெரியநாயக்கன்பாளையத்துக்கு வரும் சுவாமி கவுதமானந்தர் பிப்.,4ம் தேதி வரை வித்யாலயத்தில் தங்கி பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார். பிப்., 1ம் தேதி காலை மாற்றுத்திறனாளிகளுக்கான மராத்தான் போட்டியை தொடக்கி வைக்கிறார். பிப்., 2ம் தேதி வித்யாலயா வளாகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நட்சத்திர வனத்தையும் திறந்து வைக்க உள்ளார். மாலை, 6:00 மணி அளவில் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயாவில் உள்ள ராமகிருஷ்ணர் திருக்கோயிலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். தினமும் மாலை, 5:00 மணி அளவில் பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார். இவரது வருகையை ஒட்டி ராமகிருஷ்ண இயக்கத்தின் மூத்த துறவிகளும், கோவை வந்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
இஸ்ரேலில் பிறந்த இளைஞர் ஒருவர், இந்திய குருகுலத்தில் 12 ஆண்டுகள் தங்கி வேதக் கல்வி பயின்று, சனாதன ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar