நாகர்கோவில் : சாமித்தோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் ஆவணி திருவிழா வரும் 22-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 11 நாட்கள் நடக்கிறது. 22-ம் தேதி காலை ஆறு மணிக்கு தலைமைகுரு பாலஜனாதிபதி தலைமையில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெறுகிறது. பகல் 12 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. அதன் பின்னர் தினமும் இரவு அய்யா பல்வேறு வாகனங்களில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 29-ம் தேதி கலிவேட்டை நிகழ்ச்சி நடைபெறுகிறது. செப்., ஒன்றாம் தேதி பகல் 11 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. எல்லா நாட்களிலும் காலையிலும், மாலையிலும் பணிவிடை, உச்சிப்படிப்பு, உகப்படிப்பு ஆகியவை நடைபெறுகிறது.