பரமக்குடி : பரமக்குடியில் நேற்று முன்தினம் புனித அலங்கார மாதா தேர்பவனி மின்னொளி அலங்காரத்தில் நடந்தது. ஆக., 15 ல், சர்ச் வளாகத்தில் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. விழாவையொட்டி, தினமும் மாலை 6 மணி முதல் சிறப்பு திருப்பலியுடன், அலங்கார மாதா ஊர்வலம் சர்ச் வளாகத்தில் நடந்தது. நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு ரோசி கலையரங்கில், அரியக்குடி பங்குத்தந்தை அந்தோணி மைக்கேல் தலைமையில் திருப்பலி தொடங்கியது. பரமக்குடி பங்கு உதவித்தந்தை ஜோஸ்வா வரவேற்றார். திருப்பலியில் பரமக்குடி பங்குத்தந்தை செபஸ்தியான், ஆனந்தா கல்லூரி துணை முதல்வர் ஜான்வசந்தகுமார், சிவகங்கை பல்நோக்கு சேவை சங்க செயலாளர் சவரிமுத்து, இணை செயலாளர் ஜஸ்டின்திரவியம் கலந்து கொண்டனர். இரவு 8 மணிக்கு மேல் புனித அலங்கார அன்னையில் திருவுருவம் தாங்கிய மின்தேர்பவனி வீதி உலா நடந்தது. ஐந்து முனை, ஆற்றுப்பாலம் உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலம் சர்ச்சை அடைந்தது. நேற்று இரவு 8.30 மணிக்கு திருப்பலிக்குப் பின் கொடியிறக்கப்பட்டு விழா நிறைவுஅடைந்தது.