கீழக்கரை : திருப்புல்லாணி அருகே காக்கயன் வலசையில் உள்ள கற்பக விநாயகருக்கு, கடந்த ஜூலை 9 ல் கும்பாபிஷேகம் நடந்தது. 48 நாட்களுக்கு பின், நேற்று மண்டலாபிஷேக பூஜை நடந்தது. கணபதி, மகாலட்சுமி ஹோமம், பூர்ணகுதி நடைபெற்றன. மூலவர் சந்தன காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். உத்திரகோசமங்கை முத்துக்குமார குருக்கள் பூஜைகளை செய்தார். ஏற்பாடுகளை சொக்கநாதன் மற்றும் கிராமமக்கள் செய்தனர்.