பதிவு செய்த நாள்
30
ஆக
2014
10:08
திருச்சி : விநாயகர் சதுர்த்தியொட்டி, திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாருக்கு, 150 கிலோ எடையிலான, ’மெகா சைஸ்’ கொழுக்கட்டை, நேற்று படைக்கப் பட்டது. விநாயகர் சதுர்த்தி விழா, நாடு முழுவதும், நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திருச்சி, மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவிலில் உள்ள உச்சிப்பிள்ளையார் மற்றும் மாணிக்க விநாயகர் கோவில், மிகவும், பிரசித்தி பெற்றது. விநாயகர் சதுர்த்தியையொட்டி, ஆண்டு தோறும், உச்சிப்பிள்ளையாருக்கு, ’மெகா சைஸ்’ கொழுக்கட்டை படைக்கப்படுவது வழக்கம். அதன்படி, நேற்று காலை, 150 கிலோ எடையுள்ள, ’மெகா சைஸ்’ கொழுக்கட்டையை, அர்ச்சகர்கள் மற்றும் அடியார்கள், ’டோலி’ கட்டி, மலைக்கோட்டை மேலே தூக்கிச் சென்றனர். பாதி, மாணிக்க விநாயகருக்கும், மீதம் உச்சிப்பிள்ளையாருக்கும் படைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. பின், தரிசனத்துக்கு வந்த பக்தர்களுக்கு, பிரசாதமாக, கொழுக்கட்டை வழங்கப்பட்டது.
தொடர்புடைய கோயில்கள் :