திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த தீவனூர் சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவிலில் சதுர்த்திவிழா நடந்தது. இதையொட்டி அதிகாலை 108 லிட்டர் பால் மற்றும் மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. பக்தர்கள் விநாயகர் பெருமானுக்கு படையலிட்டு கொழுகட்டை, சர்க்கரை பொங்கல், சுண்டல் மற்றும் அன்னதானம் வழங்கினர். மாலை 7 .30 மணிக்கு அன்னவாகனத்தில் உற்சவமூர்த்தி சிறப்பு மலர் அலங்காரத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் சகுந்தலா அம்மாள் மற்றும் மணிகண்டன் செய்திருந்தனர்.