திருப்பதி: திருமலையில் உள்ள, ஆகாச கங்கை கோவிலில், நேற்று காலை மகாசம்ரோக்ஷணம் நடந்தது.திருமலையில் உள்ள, புண்ணிய தீர்த்தங்களில் ஒன்று ஆகாச கங்கை. அங்கிருந்து தினமும், திருமலை ஏழுமலையானின் அபிஷேகத்திற்கு நீர் கொண்டு வரப்படுகிறது. மேலும், புராணங்களில் அஞ்னாத்திரி மலையில், அஞ்சனாதேவி தவம் புரிந்து ஆஞ்சநேயரை பெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது. இங்கு அஞ்சனாதேவிக்கும், ஆஞ்சநேயருக்கும் கோவிலை ஏற்படுத்தி, தேவஸ்தானம் பூஜை செய்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், இந்த கோவிலை, 22.5 லட்சம் ரூபாயில் தேவஸ்தானம் புதுப்பித்தது.அதன் மகாசம்ரோக்ஷணம் நேற்று காலை நடந்தது. மதியத்திற்கு மேல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.