Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சுக்கிரனுக்குரிய ஸ்லோகம்! பத்துநாள் கொண்டாட்டம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தலைக்கனம் ஏறினால் என்ன சிகிச்சை?
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 செப்
2014
02:09

தலைக்கனம் என்ற நோய் வந்தால் மாத்திரை சாப்பிட்டு குணமாக்கலாம். தலைக்கனம் கூடப்பிறந்தகுணமாகி விட்டால், அதற்கு என்ன மருந்து? இதோ! மகாபெரியவரிடம் அதற்குரிய மருந்து கேட்போம். ‘நான் தான் இதைச் செய்தேன்’ ‘இதை சாதித்துக் காட்டினேன்’ என்று கர்வத்தோடு பேசுவது கொஞ்சம் கூட நியாயமானது அல்ல. நாம் எதையும் சாதிப்பதற்கான புத்தியோ, தேகபலமோ எங்கிருந்து வந்தது? இந்த பிரபஞ்சத்தில் நடக்கும் அத்தனை காரியமும் எப்படி நடக்கிறது. நாம் செய்கிற செயல்களுக்குஉரிய சக்தியெல்லாம் ஒரு மகாசக்தியிடம் இருந்தே வந்திருக்கிறது. அது இல்லாவிட்டால் நம்மால் மூச்சாவது விட முடியுமா? வாழ்வில் இத்தனை சாதனை புரிந்ததாக எண்ணி கர்வப்படுகிற நம்மை விட்டு சுவாசம் போய் விடுகிறது. அதைப் பிடித்து வைத்துக் கொள்ளும் சாமர்த்தியம் நமக்கு கொஞ்சமும் கிடையாது. அப்போது, நம்சக்தியெல்லாம் கனவு போல காணாமல் போய் விடும். சக்தி சமுத்திரமாக இருக்கும் அம்பிகை யின் ஒரு துளி அனுக்ரஹத்திலேயே நடக்கிற காரியங்களை எல்லாம், நம்முடையதாக எண்ணி அகந்தை கொள்வது அசட்டுத்தனம் தான் என்பது புரியும். எத்தனைக்கெத்தனை இதை அனுபவத்தில் தெரிந்து கொண்டு அம்பிகையின் முன் ஒரு துரும்பு போல அடங்கி கிடக்கிறோமோ, அத்தனை அளவுக்கு அவளின் அருளை அதிகம் பெறமுடியும்.அவதார புருஷர்களாக வந்தவர்கள் கூட, இந்த அடக்கத்தை நமக்கெல்லாம் போதிப்பதற்காக தாங்களே வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். ராமசந்திர மூர்த்தி தர்மத்திற்கும், சத்தியத்திற்கும், சாஸ்திரத்திற்கும் அடங்கி மனிதனாக வாழ்ந்து காட்டியிருக்கிறார். அவருடைய அடக்கத்தை நினைக்கும் போது, எனக்குதோன்றுகிற எண்ணத்தைச் சொன்னால் விசித்திரமாக இருக்கும். எல்லாரும் ராமர் பிறந்த காலத்தில் நாம் பிறக்கவில்லையே என வருத்தப்படுகிறார்கள் அல்லவா? எனக்கோ நான் அப்படி பிறக்காமல் போனதே நல்லது தான் என்று தோன்றுகிறது. ஏன் தெரியுமா? ராமர், தாம் ஒரு க்ஷத்திரியர் என்பதால் அடக்கத்தோடு வேத வித்துக்களையும், ரிஷிகளையும், ஆசாரியர்களையும் விழுந்து விழுந்து நமஸ்கரித்தார். அவர் காலத்தில் நான் மடாதிபதியாக இருந்திருந்தால், என்னையும் அவர் வந்து நமஸ்கரிக்கும்படியாக ஆகி விடும். அது எத்தனை தர்மசங்கடமாக இருக்கும்! இப்போதோ, அவரை நான் நமஸ்காரம் செய்து சந்தோஷப்பட முடிகிறது.நாம் நன்றாக எழுதுகிறோம், பேசுகிறோம், பாடுகிறோம், வேறு ஏதோ காரியம்செய்கிறோம் என்று உலகமே புகழ் மாலை போடுகிறது. அந்த சமயத்தில் நமக்குத் தலைக்கனம் ஏறத் தான் தொடங்கும். ஆனால், இந்த புகழ் மாலைக்குப் பாத்திரமாகி அகந்தை கொள்ள, நமக்கு கொஞ்சமும் உரிமை இல்லை என்று உணர வேண்டும். வருகிற பெருமையை எல்லாம் பராசக்தியின் பாதார விந்தங்களில் அர்ப்பணித்து விட வேண்டும். அப்போது நமக்கு ஒரு குறையும் இல்லாமல் அந்த அம்பிகையே அருள்புரிவாள்.பெரியவரின் அருளுரையை ஏற்று, தான் என்ற ஆணவத்தை ஒழிப்போம். எல்லாப்புகழையும் இறைவனிடமே ஒப்படைப்போம்.  (காஞ்சிப்பெரியவர்)

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar