தேவனாம்பட்டினம் கடற்கரையில் 37 விநாயகர் சிலைகள் விஜர்சனம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03செப் 2014 12:09
கடலூர்: கடலூர், தேவனாம்பட்டினம் கடற்கரையில் 37 விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்யப்பட்டன. விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 29ம் தேதி கொண்டாடப்பட்டது. கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் பொது இடங்களில் இந்து முன்னணி, நண்பர்கள் குழு என, பல்வேறு அமைப் புகள் சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 616 விநாயகர் சிலைகள் கடந்த 31ம் தேதி கடலூர், தேவனாம்பட்டினம் கடற்கரையில் விஜர்சனம் செய்யப் பட்டன. ஐந்தாம் நாளான நேற்றும், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து 37 விநாயகர் சிலைகள் மேள தாளம் முழங்க வாகனங்களில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, தேவனாம்பட்டினம் கடற்கரையில் விஜர்சனம் செய்யப்பட்டன