அழகர்கோவில்: அழகர்கோவில் ஆவணி பவுத்திர விழாவின் முதல் நாள் நிகழ்ச்சியான நேற்று சுந்தரராஜ பெருமாள் சுந்தரபாண்டியன் கொரடு மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு பெருமாளுக்கு 108 கலசங்களில் 135 மூலிகைகள் கலந்த தீர்த்த நீரால் திருமஞ்சனம், ஆராதனை நடந்தன. பின் பெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவி, ஆண்டாள், கல்யாணசுந்தரவள்ளி தாயார் மூலவர் சுவாமிகளுக்கு ஆண்டுக்கொருமுறை அணிவிக்கப்படும் பட்டு மாலை சாத்தப்பட்டது. செப்., 8 வரை தினமும் நடக்கும் இவ்விழாவில் சுவாமி புறப்பாடு உட்பட பல்வேறு வைபவங்கள் நடக்கின்றன.