ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி கோயிலில் பவுத்ர உற்சவம், நேற்று மாலை துவங்கியது. இதையொட்டி நேற்று மாலை 4 மணிக்கு, வேதபிரான்பட்டர் திருமாளிகையிலிருந்து மஞ்சள் மாலை மேளதாளங்களுடன் கொண்டு வரப்பட்டு, வடபத்ரசாயிக்கு சார்த்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து ஆண்டாளுக்கும் மாலை சார்த்தப்பட்டது. செப்.7ம் தேதி வரை நடக்கும் இவ்விழாவில், தினமும் மாலையில் அபிஷேகம், திருவாய்மொழி வாசித்தல் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்தனர்.