முருக்கேரி: முருக்கேரி அடுத்த நல்லம்பாக்கம் கிராமத்தில் உள்ள காளியம்மன், அய்யனாரப்பன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி கடந்த 3ம் தேதி மாலை விக்னேசுவர பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பஞ்சபாலிகை பூஜை, காப்புகட்டுதல், புற்றுமண் எடுத்து வருதல், கும்ப அலங்காரத்துடன் முதற்கால யாக பூஜைகள் நடந்தது. மறுநாள் (4ம் தேதி) காலை 6.00 மணிக்கு இரண்டாம் கால பூஜைகளாக கோ பூஜை, அஷ்ட திரவ்ய ஹோமம், விசேஷ மூலிகை ஹோமங்கள், மஹாபூர்ணாஹுதி நடந்தது. காலை 10:30 மணிக்கு மேல்மருவத்தூர் கோவில் ஆன்மிக மக்கள் இயக்க தலைவர் அன்பழகன் கலந்து கொண்டு, காளியம்மன் கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார்.