பதிவு செய்த நாள்
09
செப்
2014
12:09
கீழ்நல்லாத்துார் : மணவாள நகர் அடுத்த கீழ்நல்லாத்துாரில், நேற்று முன்தினம், சீனிவாச பெருமாள் திருக்கல்யாணம் நடந்தது. மணவாள நகர் அடுத்த கீழ்நல்லாத்துாரில், சீனிவாச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தினரால், சீனிவாச பெருமாள் திருக்கல்யாணம் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், இப்பகுதியிலுள்ள இந்திரா நகர் விளையாட்டு மைதானத்தில், நேற்று முன்தினம் மாலை 6:30 மணிக்கு, சீனிவாச பெருமாளுக்கும், பத்மாவதி தாயாருக்கும் திருக்கல்யாணம் நடந்தது. அப்போது பக்தர்கள், ’கோவிந்தா! கோவிந்தா!’ என, கோஷமிட்டு, பெருமாளை வணங்கினர்.முன்னதாக, நேற்று முன்தினம் காலை, 9:00 மணிக்கு, சீனிவாச பெருமாளுக்கு திருமஞ்சனமும்; பிற்பகல், 2:00 மணிக்கு, நாமசங்கீர்த்தனமும் நடந்தது. அதன்பின், மாலை, 4:00 மணிக்கு, சீனிவாச பெருமாள் கோவிலிலிருந்து, சீர் வரிசை எடுத்து வரும் நிகழ்ச்சியும் நடந்தன. இதில், 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர். சிறப்பு அழைப்பாளராக, பால்வள துறை அமைச்சர் ரமணா, மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.