காரைக்கால்: காரைக்கால் மாதகோவில் வீதியில் உள்ள அண்ணாமலை ஈஸ்வரர் கோவிலில் 8ம் ஆண்டு ஸம்வத்ஸராபிஷேகம், நவோத்ர சஹஸ்ர 1008 கலசாபிஷேகம் நடந்தது. கடந்த 8ம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, சங்கல்பம், தனபூஜை, கோபூஜை, நவசுஹாசினி பூஜைகளுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் 2ம் கால யாகசாலை பூஜைகளில் ஸம்வத்ராபிஷேகம் என்ற தலைப்பில் சிவாகம் சிவமணி ஆகமவித்யா ரத்னம் பழனி செல்வசுப்ரமணிய சிவாச்சாரியார் சொற்பொழிவு நடந்தது. நேற்று 4ம் கால யாகசாலை புஜைகளில் விசேஷ லதா பத்மலிங்க தீஷா மண்டலம் என்ற தலைப்பில் சிவகாம வாசஸ்பதி திருவெண்காடு சுவாமிநாத சிவாச்சாரியார் சொற்பொழிவு நடைபெற்றது. இன்று 6ம் கால யாகசாலையில் காலை 8மணிக்கு மகா பூர்ணாஹீதி. தீபாராதனை கடம் புறப்பாடு, சஹஸ்ர கலசாபிஷேகம் மகா தீபாராதனை பிரஸாதம் வழங்குதல். வரும் 12ம் தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இவ்விழாக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்துவருகிறது.