உளுந்தூர்பேட்டை: ஆதனூர் பாச்சாப்பாளையத்தில் அழகிரிவெங்கடேஸ்வர பெருமாள் உடனுரை சவுந்தரவள்ளி சுவாமி கோயில் திருப்பணிக்காக சிறப்பு பாலாலய யாகம் நடந்தது. உளுந்தூர்பேட்டை தாலு<கா ஆதனூர் பாச்சாப்பாளையத்தில் அழகிரி வெங்கடேஸ்வர பெருமாள் உடனுரை சவுந்தரவள்ளி சுவாமி கோயில் திருப்பணி துவங்கப்படுகிறது. இதற்காக கோயிலில் சிறப்பு பாலாலய யாகம் நடந்தது. நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று காலை 8 மணிக்கு திருக்கோவிலூர் ஜீயர் சுவாமி சீனிவாச ராமானுஜ ஆச்சாரியார் தலைமையில் கண்ணன் பட்டாச்சாரியார் பாலாலய யாகத்தை நடத்தினார். ஏற்பாடுகளை வேதசவுந்தரராஜன் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.