பதிவு செய்த நாள்
13
செப்
2014
01:09
அரியலூர்: நாகமங்கலம் ஸ்ரீவித்யா கணபதி கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. அரியலூர் மாவட்டம், நாகமங்கலம் கிராமத்தில் உள்ள பாரி வள்ளல் மேல்நிலைப் பள்ளியில், புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீவித்யா கணபதி கோவிலின் கும்பாபிஷே விழா, கடந்த 11ம் தேதி யாகசாலை பூஜைகளுடன் துவங்கியது. ஸ்ரீகணபதி, லெட்சுமி ஹோமங்கள், கோபூஜை, மற்றும் யாத்ரதானம், பூர்ணாகுதியுடன் கும்பாபிஷேகத்துக்கான கடம் புறப்பாட்டு பணிகள் நேற்று துவங்கியது. இதை தொடர்ந்து, நேற்று காலை, 9.50 மணியளவில், நாகமங்கலம் ஸ்ரீவித்யா கணபதி கோயில் கோபுர கலசத்துக்கு கும்பாபிஷேம் நடைபெற்றது. திருக்கடையூர் ஆனந்த் ஸ்தபதி, வயலப்பாடி ஞானசேகரன் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள், கும்பாபிஷேகத்தை நடத்தினர். நாகமங்கலம் பாரி வள்ளல் மேல்நிலை பள்ளியின் சேர்மன் சௌந்தர்ராஜன், செயலாளர் கோவிந்தராஜன், பொருளாளர் சுகுமார், துணை தலைவர் மணிமேகலை, துணை செயலாளர் அண்ணாதுரை, கல்விக்குழு நிர்வாகிகள் கதிர் கணேசன், சுப்ரமணியன், செந்தில்குமார் மற்றும் காமராஜர் கல்வி, சமூக அறக்கட்டளை உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தரிசனம் மேற்கொண்டனர். பக்தர்களுக்கு கோவிலில் அன்னதானம் வழங்கப்பட்டது.