பொங்கலூர் :பொங்கலூர் வெள்ளநத்தம் காளியம்மன் கோவிலில் நேற்று காலை 7.15 மணிக்கு கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. 8.00 மணிக்கு விநாயகர், கரியகாளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, அன்னதானம் நடந்தது.பேரூர் மேல்மடம் ஞானசிவாசாரியார், வரன்பாளையம் சிவாசல அடிகள், சிங்காநல்லூர் சிவா ஜலபதி சிவாச்சாரியார், கொடுவாய் சிவசிதம்பர குருக்கள், புத்தரசல் ஆனந்த சிவசுப்பிரமணியம் ஆகியோர் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் ராமலிங்கம், மோகனசுந்தரம், துரைசாமி, வெங்கடாசலம், கோவிந்தசாமி மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.