திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் வேணுகோபாலன் மகோத்சவ விழாவில் சுவாமி சிம்ம வாகனத்தில் வீதியுலா நடந்தது. திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் நேற்று முன்தினம் இரவு வேணுகோபாலன் சிறப்பு அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் வீதியுலா நடந்தது. நேற்று காலை 6.00 மணிக்கு ருக்மிணி சத்யபாமா சமேத வேணுகோபாலன் முத்துபந்தல் விமானத்தில் வீதியுலா நடந்தது. மதியம் அலங்கார திருமஞ்சனம், சேவை சாற்றுமறை நடந்தது. இரவு யானை வாகனத்தில் வாணவேடிக்கையுடன் வீதியுலா நடந்தது. ஜீயர் ஸ்ரீ நிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் தலைமையில் நடந்த விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.