பதிவு செய்த நாள்
22
செப்
2014
11:09
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீப்ரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா வரும் 24ம் தேதி துவங்குகிறது. உளுந்தூர்÷ பட்டை தாலுகா பாதூர் ஸ்ரீப்ரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவிலில் வரும் 24ம் தேதி பிரம்மோற்சவ விழா துவங்குகிறது. அன்று மாலை ஸ்ரீசெல்வர் மேனாவில் புறப்பாடு அங்குரார்பணம், 25ம் தேதி காலை 7:30 மணிக்கு ஹஸ்த நஷத்திரம் கன்யா லக்னத்தில் த்வஜாரோஹணம், திருப் பல்லக்கு, மதியம் சிறப்பு திருமஞ்சனம் ததியாராதனம், இரவு ஹம்ஸ் வாகன உற்சவம் நடக்கிறது. தொடர்ந்து 26ம் தேதி காலை திருப்பல்லக்கு திரு மஞ்சனம், ததியாராதனம், இரவு சந்திரபிரபை, 27ம் தேதி இரவு ஹனுமந்த வாகனத்திலும், 28ம் தேதி இரவு சேஷ வாகனத்திலும், 29ம் தேதி காலை திருப்பல்லக்கு பெருமாள் நாச்சியார் திருக்கோலத்தில் சிறப்பு திருமஞ்சனமும், இரவு தங்க கருட வாகன உற்சவமும் நடக்கிறது. வரும் 30ம் தேதி காலை திருப்பல்லக்கும், ஸ்ரீமதாதிவண் சடகோப யதீந்த்ர மஹா தேசிகன் திருவீதி புறப்பாடு, பெருமாள் மங்களாசாசனம், மதியம் 1 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், இரவு யானை வாகன உற்சவமும் நடக்கிறது. அக்.,1ம் தேதி இரவு புஷ்ப பல்லக்கு, 2ம் தேதி இரவு வேடுபரி குதிரை வாகன உற்சவமும் நடக்கிறது. மறுநாள் (3ம் தேதி) காலை ரதோற்சவம், பெருமாள் தேரில் இருந்து புறப்பாடும், 4ம் தேதி காலை மட்டியடி உற்சவம் ஸ்ரீ நிகமந்த மஹா தேசிக சுவாமி திருவீதி புறப்பாடு, இரவு தேசிகர் திருவீதி புறப்பாடும் நடக்கிறது. தொடர்ந்து 5ம் தேதி இரவு விடயாற்றி உற்சவம் சாத்துமுறை, 6ம் தேதி காலை ஸ்ரீதேசிகர் சுவாமிக்கு திருமஞ்சனம், இரவு சந்திரபிரபை வாகனத்திலும், ஸ்ரீநிகமாந்த மஹாதேசிகன் திருவீதி புறப்பாடு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தா விஜயராகவ அய்யங்கார் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.