பதிவு செய்த நாள்
24
செப்
2014
01:09
காவேரிப்பட்டணம்: மஹாளய அமாவாசையை முன்னிட்டு, அங்காள அம்மன், ஆஞ்சநேயர் கோவில்களில் நடந்த சிறப்பு பூஜைகளில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். காவேரிப்பட்டணம் பன்னீர் செல்வம் தெரு அங்காளம்மன் கோவிலில் மஹாளய அமாவாசையை முன்னிட்டு, காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தது. மதியம் 12 மணிக்கு, பக்தர்களுக்கு, அன்னதானம், மாலை, 6 மணிக்கு அம்மன் பிரகார உற்சவம் செல்லும் நிகழ்ச்சி நடந்தது.
* தர்மபுரி வெளிப்பேட்டை தெரு, அங்காளம்மன் கோவில் மஹாளய அமாவாசையை ஒட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தது. காலை, 10 மணிக்கு அம்மன் திருவீதி உலா, மதியம், 1 மணிக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும், இரவு, 9 மணிக்கு சாமபூஜை நடந்தது.
* காரிமங்கலம் அடுத்த வெள்ளையன் கொட்டாவூர் மகாசக்தி மாரியம்மன் கோவில் மஹாளய அமாவாசையை முன்னிட்டு கணபதி ஹோமம், சண்டி ஹோமம், அம்மனுக்கு, 12 வகையான சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தது. அருணேஸ்வரர் கோவில் குருக்கள் புருஷோத்தமன் தலைமை வகித்து, சிறப்பு பூஜையை நடத்தி வைத்தார். அம்மன் பிரகார உற்சவமும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை, காரிமங்கலம் டவுன் பஞ்சாயத்து சேர்மன் சத்யா அசோக்குமார் குடும்பத்தினர் செய்திருந்தனர்.
* தர்மபுரி எஸ்.வி., ரோடு ஆஞ்சநேயர் கோவில், அங்காளம்மன் கோவில், கீழ்த்தெருதாச ஆஞ்சநேயர் கோவில், கெரகேடஅள்ளி வீரதீர ஆஞ்சநேயர் கோவில், முத்தம்பட்டி ஆஞ்சநேயர் கோவில், தொப்பூர் மன்றோ கனவாய் ஆஞ்சநேயர் கோவில், ஒகேனக்கல் தேசநாதேஸ்வரர் கோவில், அரூர் தீர்த்தகிரீஸ்வரர் கோவில், புட்டிரெட்டிப்பட்டி சோமேஸ்வரர் கோவில் உட்பட பல்வேறு கோவில்களில், மஹாளய அமாவாசையை முன்னிட்டு, நேற்று ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தது. மஹாளய அமாவாசையை முன்னிட்டு, ஒகேனக்கல் காவிரி ஆற்றங்கரை, இருமத்தூர் தென்பெண்ணை ஆற்றங்கரை, தர்மபுரி தாச ஆஞ்சநேயர் கோவில், ராகவேந்திரர் கோவில் உட்பட பல்வேறு பகுதிகளில் ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.