பதிவு செய்த நாள்
24
செப்
2014
01:09
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், நவராத்திரியை முன்னிட்டு, முதல் முறையாக கொலு வைத்து வழிபாடு நடத்தவுள்ளனர். புராட்டாசி மாதத்தில் அமாவாசைக்கு பின் வரும், ஒன்பது நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படும். விழாவையொட்டி வீடு, கோவில், பள்ளிகள் மற்றும் மடங்களில் நவராத்திரி கொலு வைத்து வழிபாடு நடத்தப்படும். பத்தாவது நாளில், விஜயதசமி கொண்டாடப்படும். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், கடந்தாண்டு வரை, நவராத்திரி கொலு வைத்து வழிபாடு நடத்தப்பட வில்லை. இந்தாண்டு, முதல் முறையாக, ஸ்ரீரங்கம் கோவிலில் நவராத்திரி விழா கொண்டாட உள்ளனர். இதற்காக, ஆயிரங்கால் மண்டபத்தில், நாளை, (25ம் தேதி) முதல் கொலு வைப்பதற்கான வேலைகள் துரிதகதியில் நடந்து வருகிறது. ஒன்பது நாளும் மாலை நேரத்தில் கொலு வழிபாடு நடத்தப்பட உள்ளது, என கோவில் அலுவலர்கள் தெரிவித்தனர்.