கரூர்: கரூர் மாரியம்மன் கோவில் மற்றும் மாவடி ராமசாமி கோவில்களில், நவராத்திரி உற்சவம், இன்று முதல் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கரூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் மற்றும் மாவடி ராமசாமி கோவில்களில், இன்று, 24ம் தேதி முதல், அக்டோபர், 5ம் தேதி முடிய சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் பரம்பரை அறங்காவலர் முத்துக்குமார் உள்ளிட்ட கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.