புதுச்சேரி: ராமகிருஷ்ணா நகர் லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில், வரும் 29ம் தேதி சகஸ்ரநாம அர்ச்சனை நடக்கிறது. முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில் லட்சுமி ஹயக்ரீவர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், வரும் 29ம் தேதி காலை 9.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை, மாணவ, மாணவியரின் கல்வி வளம் சிறக்க, லட்சுமி ஹயக்ரீவ சகஸ்ரநாம அர்ச்சனை, லட்சார்ச்சனையாக நடக்கிறது. இந்த லட்சார்ச்சனை, மாணவ, மாணவியருக்கு கல்வி வளம், நல்லெண்ணம், நற்சிந்தனை, பாடங்களை நன்கு கற்றுணரும் திறன் அமைந்து, அனைத்து வளங்களும் பெறுவதற்காக நடத்தப்படுகிறது. அர்ச்சனைக்கு 150 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.மேலும் விபரங்களுக்கு, 90954 28302 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை லட்சுமி ஹயக்ரீவ பெருமாள் கோவில் சிறப்பு அதிகாரி மற்றும் பக்த ஜன சபையினர் செய்துள்ளனர்.