செஞ்சி தாலுகா வடவெட்டி அங்காளம்மன் கோவிலில் நேற்று முதல் நவராத்திரி விழா துவங்கியது. விழாவை முன்னிட்டு நேற்று காலை விநாயகருக்கு மூழிகம், பலி பீடம் பிரதிஷ்டையும், நவராத்திரி சிறப்பு ஹோமமும் நடந்தது. காலை 9 மணிக்கு கலச பிரதிஷ்டையும், விக்னேஸ்வர பூஜை, நவக்கிரக பூஜை, லட்சுமி பூஜை, துர்கா பூஜை நடந்தது. முற்பகல் 11.30 மணிக்கு பூர்ணாஹூதியும், கலச நீர் கொண்டு விநாயகர், மூஷிகம், பலி பீடம் மற்றும் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். பூஜைகளை திண்டிவனம் நாகராஜ் அய்யர் செய்தார். அறங்காவலர் புண்ணி யமூர்த்தி, ஒன்றிய சேர்மன் விஜயா மற்றும் விழா குழுவினர் கலந்து கொண்டனர்.