திண்டிவனம்: திண்டிவனம் இலுப்பதோப்பு ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது. திண்டிவனம் இலுப்பதோப்பு பாப்பாத்தியம்மன் என்றழைக்கப்படும் ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா கடந்த 25ம் தேதி துவங்கியது. விழாவை முன்னிட்டு கோவிலில் கொலுக் கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது. தினமும் ஒரு அம்மன் அலங்காரத்தில் ஊஞ்சல் சேவையும், விளக்கு பூஜையும் நடக்கிறது. சங்கரநாராயணன் ஐயர் சகஸ்ரநாம அர்ச்சனையை செய்து வைத்தார். அர்ச்சகர் ராமச்சந்திரன், விழா குழுவினர், கோவில் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.