பதிவு செய்த நாள்
04
அக்
2014
02:10
செஞ்சி: வழக்கிலிருந்து ஜெ., விடுபடவும், உடல் நலமுடன் இருக்கவும் செஞ்சி நகர 9வது வார்டு அ.தி.மு.க., சார்பில் செஞ்சி காந்தி பஜார் செல்வ விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. செல்வ விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து வழிபட்டனர். நகர செயலாளர் பிரித்விராஜ் தலைமை தாங்கினார். பால் சொசைட்டி தலைவர் பன்னீர் செல்வம், மணிமாறன், அனுக்குமார், காமராஜ், காதர்அலி, பாலகிருஷ்ணன், பேப்பர் கந்தன், முன்னாள் கவுன்சிலர் சேகர்,ராஜாராம், பாஸ்கரன், பாபு,ராஜேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர். செஞ்சி சிறுகடம்பூர் கொத்தமங்கலம் சாலை வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடத்தினர்.