பதிவு செய்த நாள்
06
அக்
2014
01:10
செய்யூர் : கடுக்கலுார் ஆதிகேசவ பெருமாள் கோவில் பவித்ரோற்சவத்தையொட்டி, கருடசேவை வீதியுலா நேற்று காலை நடந்தது. சித்தாமூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கடுக்கலுார் ஊராட்சியில், ஆதிகேசவபெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் பவித்ரோற்சவ விழா, கடந்த 2ம் தேதி துவங்கியது. விழாவையொட்டி, அன்று மாலை 6:30 மணிக்கு, பகவதனுக்ஞை, பகவதப்ரார்த்தனை, வாஸ்து சாந்தியும், 3ம் தேதி, ஹோமம், பவித்ரசமர்ப்பணம், பூர்ணாஹுதியும், 4ம் தேதி 6:00 மணிக்கு, பெருமாள் தாயார் இரட்டை புறப்பாடு நிகழ்ச்சியும் நடந்தது.இந்நிலையில் நேற்று காலை 6:00 மணிக்கு, கருடசேவை வீதியுலாவும், பெரிய பெருமாள் திருமஞ்சனமும் கோலாகலமாக நடந்தது. இதில் இருநுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசித்துச் சென்றனர்.