சென்னை : வேளச்சேரி வண்டிக்காரன் தெரு கப்பா வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ரமண கந்தாலயத்தில் நவராத்திரி விழா நடைபெற்றது. இங்குள்ள சன்னிதியில் நின்ற கோலத்தில் உள்ள மகா சரஸ்வதிக்கு ஒன்பது நாட்களும் அபிஷேகமும், சிறப்பு அலங்காரம் நடந்தது. விஜயதசமியை முன்னிட்டு, மாலை 5:00 மணிக்கு சரஸ்வதி அம்பாளுக்கு, சாகம்பரி அலங்காரம் செய்யப்பட்டு ஹோமங்களும், மந்திரங்களும், அர்ச்சனைகளும் நடந்தன. மகளிர் குழுவினர் பக்திப் பாடல்களைப் பாடினர். நிறைவில், அன்னதானம் நடந்தது.