பதிவு செய்த நாள்
09
அக்
2014
11:10
நாகப்பட்டினம் : நாகை அருகே உள்ள, கோரக்க சித்தர் ஆசிரமத்தில், புரட்டாசி பவுர்ணமி விழாவை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது. மருத்துவம், யோகம், ஞானத்தில் சிறந்து விளங்கிய கோரக்க சித்தர், நாகை, வடக்குபொய்கைநல்லூரில் ஜீவசமாதி அடைந்தார்.
அந்த இடத்தில், ஆசிரமம் அமைக்கப்பட்டு, மாதந்தோறும், பவுர்ணமி இரவு முழுவதும், ஜீவசமாதிக்கு தீபாரதனை வழிபாடுகள் நடைபெறும். புரட்டாசி பவுர்ணமி விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு, ஆசிரமத்தில், கோரக்க சித்தருக்கு நடந்த சிறப்பு வழிபாட்டில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.