ஆன்மிகத்தில் நிகழும் அபூர்வமான நிகழ்ச்சி கும்பாபிஷேகம். இதன் மூலம் கண்ணுக்குத் தெரியாத கடவுளை ஒரு குறிப்பிட்ட கோயிலில் குறிப்பிட்ட தெய்வத்தின் பெயரால் வரவழைக்கிறோம். தெய்வீக சக்தி அப்போது நம் உடலில் பதிவதால் இறைச்சக்தியில் மூழ்கி புனிதமடைகிறோம்.இதனால், உடலும், மனமும் உறுதி பெற்று வாழ்வில் மகிழ்ச்சி நிலைக்கிறது.