பதிவு செய்த நாள்
14
அக்
2014
10:10
பழநி : பழநியில் கந்தசஷ்டி விழா வரும் 24ல் மலைக் கோயிலில் காப்பு கட்டுதலுடன் துவங்குகிறது. 29ல் சூரசம்ஹாரம் நடக்கிறது. பழநி மலைக்கோயிலில் காப்புகட்டுதலுடன் கந்தசஷ்டி விழா அக்.,24ல் துவங்கி அக்.,30வரை நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, (அக்.,29ல்) அதிகாலை 4 மணிக்கு மலைக்கோயில் நடைதிறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனமும், அதிகாலை 4.30 மணிக்கு விளா பூஜை, படையல் நைவேத்தியம் நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு நடக்கவேண்டிய, சாயரட்சை பூஜை, பகல் 1.30 மணிக்கும், 2.30 மணிக்கு பராசக்திவேல் வாங்குதல், மாலை 6 மணிக்கு மேல் சூரன்வதம் நிகழ்ச்சிக்கு நடக்கிறது. இதைப்போலவே அக்., 30ல் மலைக்கோயிலில் காலை 10 மணிக்குமேல் 11மணிக்குள், பெரியநாயகியம்மன்கோயிலில் மாலை 7 மணிக்குமேல் இரவு 8 மணிக்குள் திருக்கல்யாணம் நடக்கிறது. ஏற்பாடுகளை பழநிகோயில்நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.