பதிவு செய்த நாள்
15
அக்
2014
10:10
வேலூர்: ஜெயலலிதா கைதை தொடர்ந்து, கோவில்களில் நடந்து வரும் சிறப்பு பூஜை, யாகத்தின் காரணமாக, கோவில்களில் வருமானம் அதிகரித்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா விடுதலை பெற வேண்டி, அ.தி.மு.க., வினர் கோவில்களில் மொட்டை அடிப்பது, அன்னதானம், பாலாபிசேகம், வெண்ணை அலங்காரம், தங்கத் தேர் இழுப்பது, அங்கப்பிரதசனம், மண் சோறு சாப்பிடுவது மற்றும் சிறப்பு பூஜை, யாகம் உள்ளிட்டவை நடத்தி வருகின்றனர். மேலும், அ.தி.மு.க., வினர், தினமும் ஏதாவது கோவில்களில் காலை, மாலை யில் போட்டி போட்டுக் கொண்டு பூஜை உள்ளிட்டவற்றை நடத்தி வருகின்றனர். . கிராமங்கள் முதல், நகரம் வரை, சிறிய கோவில்கள் முதல் பெரிய கோவில்கள் வரை இது போன்ற நிகழ்சிகள் நடந்து வருகிறது. இதனால் கோவில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. கோவில் உண்டியல் வருமானம் அதிகரித்துள்ளது. சிறப்பு தரிசனம், அம்மா பெயரில் அர்ச்சனை, தங்கத் தேருக்கு பணம் கட்டுவதால் தினமும் கோவிலுக்கு வருமானம் கிடைக்கிறது. கோவிலில் அன்னதானம் செய்வதால், பலருக்கு வேலை கிடைக்கிறது. இது வரை கோவிலுக்கு வராதவர்கள் எல்லாம் இப்போது வரத்தொடங்கியதால் கோவில் களை கட்டுகிறது. இதனால் ஆன்மிகம் செழிப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர். ஒரு வேளை கூட தீபம் ஏற்ற முடியாத கோவில்களில் இப்போது, மூன் று வேளை தீபம் ஏற்றி வழிபாடு நடக்கிறது. ஜெயலலிதா முதல்வராக இருக்கும் போது கோவில்களுக்கு நிறைய உதவிகள் செய்தார். இப்போது சிறையில் இருக்கும் போது, அவரது கட்சியினரால் வருமானம் கூடியுள்ளதாக ஆன்மீகவாதிகள் மத்தியில் பரபவலாக பேசப்பட்டு வருகிறது.