தாடிக்கொம்பு: தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை, மாலையில் ஆறுகால பூஜை நடந்தது. பைரவருக்கு பால், சந்தனம், இளநீர், பன்னீர், திருமஞ்சணம், தேன், உள்ளிட்ட அபிஷேகம் செய்யப்பட்டது. மஹாரண்யம் முரளிதர சுவாமியின் சீடர் கிருஷ்ணசைதன்யதாஸ்சின் ஹரே ராம நாம சங்கீர்த்தனம், கூட்டு பிரார்த்தனை மற்றும் சொற்பொழிவு நடந்தது. பக்தர்களுக்கு திருமஞ்சண பொடி பிரசாதம் வழங்கப்பட்டது.